பொது

RORO ஃபெரி சேவை நடத்துனர்களுக்கு டீசல் உதவித் தொகை வழங்கப்படும்

20/12/2024 06:16 PM

புத்ராஜெயா, 20 டிசம்பர் (பெர்னாமா) --   2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி நாட்டின் முக்கிய தீவுகளில் உள்ள அனைத்து ஃபெரி பயணிகள் படகு மற்றும் ROLL ON ROLL OFF எனப்படும் RORO ஃபெரி சேவை நடத்துனர்களுக்கு டீசல் உதவித் தொகை வழங்கப்படும்.

ஒரு லிட்டருக்கு அதிகபட்சம் 50 சென் உதவித் தொகை விகிதம் என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு உதவித் தொகையுடன் கூடிய டீசல் உச்சவரம்பு விலை, லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் ஐம்பது சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எதிர்வரும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் தங்களது முதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அந்தோணி லோக் கூறினார்.

லாபுவான் கூட்டரசு பிரதேசம், லங்காவி, பூலாவ் பங்கோர், பூலாவ் கெத்தாம், பூலாவ் தியோமான், பூலாவ் ரெடாங்  மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் உள்ள பயணிகளுக்கான ஃபெரி அல்லது படகு மற்றும் RORO சேவைகளின் வியூக பாதைகளில் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

"நான் குறிப்பிட்ட இடங்களில் உள்ள பகுதிகளில் ஃபேரி உரிமையாளர்கள், கட்டண விகிதத்தை அதிகரிக்கிறார்கள். நாங்கள் உதவித் தொகை வழங்கிய பின்னரும், கண்டிப்பாக அவர்கள் கட்டண விகிதத்தை உயர்த்துவார்கள். நிச்சயமாக உதவித் தொகையை மீட்டுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம். அதுமட்டுமல்ல, போக்குவரத்து அமைச்சின் அனுமதியின்றி கட்டணத்தை அதிகரித்தால் அவர்களின் உரிமமும் மீட்டுக் கொள்ளப்படும்", என்று அவர் கூறினார்.

மலேசிய கடல் துறையில் பதிவு செய்வது மற்றும் அமலாக்க தரப்பினரால் அங்கீகரிப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்குகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களிடமிருந்து டீசல் விநியோகத்தைப் பெறுவது போன்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைத் தகுதி பெற்ற உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)