புதுடெல்லி, 20 டிசம்பர் (பெர்னாமா) - தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விளையாட்டாளருமான ரவிசந்திரன் அஸ்வின், அவ்விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கின்றார்.
விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதால் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ரவிசந்திரன் அஸ்வின் இந்த முடிவை அறிவித்தார்.
பல இக்கட்டான தருணங்களில் இந்திய அணிக்கு விக்கெட் எடுத்துக் கொடுத்து திருப்பு முனையை ஏற்படுத்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர் ரவிசந்திரன் அஸ்வின்.
சில தருணங்களில் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 38 வயதான அவர் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)