கோலாலம்பூர், 20 டிசம்பர் (பெர்னாமா) - மலேசியாவில் ஒவ்வொரு மாதமும் 15க்கும் மேற்பட்ட விவகாரத்து வழக்குகள் வயதான தம்பதிகளை உட்படுத்தி இருப்பதாக குடும்ப நல ஆலோசகர் ஹசிம் சாலே தெரிவித்தார்.
"ஒவ்வொரு மாதமும் விவகாரத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
இதில் 15க்கும் மேற்பட்ட விவாகாரத்து வழக்குகள் 50 முதல் 69 வயதுக்குட்பட்ட தம்பதிகளை உட்படுத்தியதாகும். இந்த வழக்குகளில், கணவனை ஏமாற்றுவதும், மனைவிக்குத் தெரியாமல் மறுமணம் செய்வதும் அடங்கும்," என்று அவர் கூறினார்.
கணவனின் வாழ்வில் வேறொரு பெண் இருப்பதை எந்தவொரு பெண்ணும் ஏற்றுக்கொள்வது இல்லை.
இதனால் உறவில் முறிவு ஏற்பட்டு குடும்பத்தில் பெரிய விரிசல் விழுகிறது.
இதன் காரணமாக பெரும்பாலான மனைவியர் விவாகரத்து கோரி தமது அலுவலகத்திற்கு வருவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)