பொது

மூன்று நண்பர்களால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்

20/12/2024 07:25 PM

பாரிட், 20 டிசம்பர் (பெர்னாமா) --   கடந்த ஞாயிற்றுக்கிழமை, பேராக், பாரிட்டில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழக தங்கும் விடுதியில், தமது மூன்று நண்பர்களால் மாணவர் ஒரு தாக்கப்பட்டுள்ளார். 

அத்தாக்குதலினால், 18 வயதுடைய அம்மாணவருக்கு முகம், கைகள் மற்றும் வயிறு ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

காயமடைந்த அம்மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மத்திய பேராக் போலீஸ் தலைவர் ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா கூறினார். 

இச்சம்பவம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை, பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை போலீஸ் புகார் வழங்கியதைத் தொடர்ந்து, 18 முதல் 20 வயதுக்குட்பட்ட அம்மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 147-இன் கீழ் அவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

இதனிடையே, விசாரணைக்காக மூன்று நாட்களுக்கு அம்மூன்று மாணவர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜாமீன் வழங்கி விடுவிக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)