வானுவாட்டு, 21 டிசம்பர் (பெர்னாமா) -- கடுமையான நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட வானுவாட்டுவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியில் போலீசாரும் ஈடுபட்டு வருகின்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் மீட்புக் குழு ஒன்றும் கைகோர்த்துள்ளது.
நிலநடுக்கத்தினால் காயமடைந்தவர்கள் பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்புக் குழுவினருக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்கும் வகையில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை ரிக்டர் அளவை கருவியில் 7.3-ஆக பதிவான நிலநடுக்கத்தால், சீனாவைச் சேர்ந்த இருவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, அந்நாட்டில் 7 நாள்களுக்கு அவசர நிலை அறிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)