இந்தியானா , 21 டிசம்பர் (பெர்னாமா) -- இரு பதின்ம வயது பெண்களை கொலை செய்த குற்றத்திற்காக 52 வயது ஆடவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 130 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்தியானா மாநிலத்தை சேர்ந்த அவ்வாடவர், 2017-ஆம் ஆண்டு அக்குற்றத்தை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
13 வயது அபிகெய்ல் வில்லியம்ஸ் மற்றும் 14 வயதான லிபர்ட்டி ஜெர்மன் எனும் பதின்ம வயது பெண்களை, ஏலன் எனும் அந்த ஆடவர் கொலை செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டெல்ஃபி எனும் நகரில் அவ்விருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவரின் கைத்தொலைபேசியில் இருந்த காணொளி, ஒலிப்பதிவு, புகைப்படம் ஆகியவற்றில் அந்த ஆடவரின் முகமும் குரலும் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே Allen கைது செய்யப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)