பொது

ஓய்வுபெற்றவர்களுக்கான சிறப்பு அங்கீகாரத்தைத் தொடர அரசாங்கம் இணக்கம்

21/12/2024 04:46 PM

சுபாங் ஜெயா, 21 டிசம்பர் (பெர்னாமா) - ஓய்வுப்பெற்றவர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வுப்பெற்றவர்களுக்கான சிறப்பு அங்கீகாரம், பி.கே.கே.பியைத் தொடர அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட குழுவினரின் நலனைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

''2024ஆம் ஆண்டி டிசம்பர் முதலாம் தேதி பொது சேவை ஊதிய முறை, எஸ்.எஸ்.பி.ஏ அமலுக்கு வந்தது. 1980ஆம் ஆண்டு ஓய்வூதிய ஒருங்கிணைப்பு சட்டம் (சட்டம் 238), செக்‌ஷன் 3-க்கு ஏற்ப பொது சேவை துறையின் ஊதியத்தை சரிபார்ப்பதன் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அது முழுமைபெறும். ஓய்வூதியம் பெறுபவரின் இறுதி ஊதியம், தங்களின் சேவை குழுக்களுக்கு ஏற்ப ஊதியச் சரிசெய்தல் விழுக்காட்டின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகையை மாற்றியமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 2024ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி 2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி வரை கட்டம் கட்டமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும், '' என்றார் அவர்.

இன்று சிலாங்கூர், சுபாங்கில் அரசாங்கம் மற்றும் அண்மைய விவகாரங்கள் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவினங்களைக் கையாள்வதில் ஓய்வுப்பெற்றவர்களின் நலனைப் பாதுகாக்க அவர்கள் அதிக ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதிசெய்யும் நோக்கத்தில் பி.கே.கே.பி திட்டத்தைத் தொடர முடிவெடுக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)