கோலாலம்பூர் , 21 டிசம்பர் (பெர்னாமா) -- கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதியின் பள்ளி விடுமுறையை முன்னிட்டு நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 25 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளை நோக்கி பயணிக்கும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம், LLM-இன் (எல்.எல்.எம்) தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹாருன் தெரிவித்துள்ளார்.
அதில் 21 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பிளஸ் நெஞ்சாலையை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சசாலி ஹாருன் கூறினார்.
கோலாலம்பூர்-காராக் நெஞ்சாலையில் 188,130 வாகனங்களும், முதல் கட்டமாக கிழக்குகரை நெடுஞ்சாலையில் 87,380 வாகனங்களும், இரண்டாம் கட்டமாக அதே நெஞ்சாலையில் 139,830 வாகனங்களும் மேற்கு கரை நெடுஞ்சாலையில் 115,590 வாகனங்களும் பயணிக்கக்கூடும்.
இக்காலக்கட்டம் முழுவதும் நெடுஞ்சாலை பயனீட்டாளர்களின் பயணம் பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் முழுமையான தயார்நிலை பணிகளை அனைத்து நெஞ்சாலை நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று எல்.எல்.எம் அறிவுறுத்தியுள்ளது.
நெஞ்சாலை போக்குவரத்து நிலவரங்களை அறிந்து கொள்ள கீழ் காணும் எண் மற்றும் மின்னச்சல் முகவரியுடன் தொடர்புக் கொள்ளலாம்.
Pengurusan Trafik LLM (1-800-88-7752) // paparan kamera liter tertutup (CCTV) - https://www.llm.gov.my.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)