BREAKING NEWS   PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | 
 பொது

உணவக ரசீதுகளில் இழிவான வாசகங்கள் - போலீஸ் விசாரணை

22/12/2024 04:53 PM

ஜோகூர், 22 டிசம்பர் (பெர்னாமா) --   ஜோகூர் மாநிலத்தின் குளுவாங், முவார் மற்றும் பத்து பஹாட் ஆகிய மூன்று மாவட்டங்களில் விரைவு உணவகம் ஒன்று, மலாய் இனத்திற்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இழிவான வாசகங்களைக் கொண்ட ரசீதுகளை வெளியிட்டது தொடர்பாக மூன்று விசாரணை அறிக்கைகளை போலீசார் திறந்துள்ளனர்.

1948ஆம் ஆண்டு நிந்தனை சட்டம், செக்‌ஷன் 4(1), குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 298, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 233 ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த மூன்று மாவட்டங்களில், டிசம்பர் 19 மற்றும் 20-ஆம் தேதியிடப்பட்ட ரசீதுகள் ஒரே நபரால் பெறப்பட்டதைத் தமது தரப்பு கண்டறிந்ததாக அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குமார் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)