BREAKING NEWS | PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | |
கூலாய், 22 டிசம்பர் (பெர்னாமா) -- ஜோகூர், செனாயில் இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து சாம்பலாகின.
காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து அழைப்பு வந்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினரை அனுப்பி வைத்ததாக KULAI தீயணைப்பு நிலையத்தின் தலைவர் துவான் முஹ்மட் ஃபவுசி அவாங் தெரிவித்தார்.
''சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், ஒரு கடையின் சமையலறையில் இருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது,'' என்றார் அவர்.
இச்சம்பவத்தில் மியன்மார் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்திருக்கும் நிலையில், அவர்களில் ஒருவருக்கு கால் முறிந்திருப்பதாக முஹ்மட் ஃபவுசி தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தினால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)