ரியோ கிராண்டே டோ சுல், 23 டிசம்பர் (பெர்னாமா) -- தெற்கு பிரேசிலின் சுற்றுலா நகரமான கிராமடோவில் 10 பேரை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று கடைகள் மீது விழுந்து நொருங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக மாநில அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் விமானத்தின் உரிமையாளரும் விமானியுமான லூயிஸ் கிளாடியோ கலேசியும் மற்ற ஒன்பது பயணிகளுடன் உயிரிழந்தார்.
விமானத்தில் இருந்த அனைவரும் விமானியின் குடும்ப உறுப்பினர்கள் என்று ரியோ கிராண்டே டோ சுல் ஆளுநர் எட்வர்டோ லைட் தெரிவித்தார்.
இவ்விபத்தில் மேலும் 17 பேர் காயத்திற்கு ஆளாகினர்.
அவர்களில் 12 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வரும் நிலையில், இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கனெலா விமான நிலையத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குப் புறப்பட்ட அவ்விமானம், சீரற்ற வானிலையில் சாவ் பாலோவில் உள்ள ஜுண்டியாய் பயணத்தை மேற்கொண்டதாக எட்வர்டோ கூறினார்.
விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை மற்றும் தடுப்பு மையம் விசாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)