காங்போக்பி, 23 டிசம்பர் (பெர்னாமா) -- மணிப்பூரில், Meitei சமூகத்திற்கும், குக்கி-சொ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு தொடங்கிய சண்டையினால் பல்லாயிரக் கணக்கானோர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
19 மாதங்களாக நீடிக்கும் இந்த வன்முறைகளினால் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
குறைந்தது 60 ஆயிரம் பேர் இட மாற்றம் செய்துள்ளனர்.
தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள், சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் நிவாரண மையங்களில் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தற்போது சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உயிரைக் காத்துக் கொள்ள 19 மாதங்களாக நிவாரண மையமாக மாற்றப்பட்ட அரசாங்க கட்டிடத்தில் போதுமான வசதிகள் இன்றி அவர்கள் தங்கி இருக்கின்றனர்.
இரண்டு இன மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தின் ஒரு பகுதி Meitei சமூகத்தின் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி குக்கி-சொ கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்த வன்முறைகள் ஆயுதமேந்திய போராளிகளை உருவாக்கியுள்ளதோடு அவர்கள் தங்களி எதிராளிகளை அடையாளங்களைப் பரிசோதிக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர்கள் இரவில் ஆபத்தான பகுதிகளில் காவல் பணியை மேற்கொள்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)