பொது

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கூடுதல் 2 ETS-கான 6,300 டிக்கெட்டுகள் விற்பனை

23/12/2024 07:51 PM

கோலாலம்பூர், 23 டிசம்பர் (பெர்னாமா) --  கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, KL SENTRAL - PADANG BESAR பயணத்திற்கான கூடுதல் இரண்டு மின்சார இரயில் சேவைக்கான 6 ஆயிரத்து 300 டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளன.

பெருநாள் காலம் மற்றும் டிசம்பர் 20 தொடங்கி 29-ஆம் தேதி வரையில் வழங்கப்பட்டிருக்கும் பள்ளி விடுமுறை முன்னிட்டு வசதியான சேவை மற்றும் நியாயமான கட்டணங்களுக்கான அதிக தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் கூடுதல் இரயில் சேவை வழங்கப்பட்டதாக Keretapi Tanah Melayu நிறுவனம், KTMB தலைமை நிறுவன அதிகாரி, சுஹாய்மி யாக்கோப் தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூரில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, KTMB பயணிகளுக்குச் சிறப்பு பொட்டலங்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் சுஹாய்மி அவ்வாறு கூறினார்.

டிக்கெட் விற்பனையில் 80 விழுக்காடு, நகரங்களுக்கான இரயில் சேவை, ETS மற்றும் கிழக்கு கடற்கரைக்கான Express Timuran சேவையை உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)