அரிசோனா, 23 டிசம்பர் (பெர்னாமா) -- அமெரிக்காவில் டிக்டாக் செயலியை, சிறிது காலம் செயல்பட அனுமதிக்க விரும்புவதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் பிரச்சாரத்தின்போது, சமூக ஊடகத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்ததால், அவர் அவ்வாறு கருத்துரைத்திருக்கிறார்.
''அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு நாங்கள் அதிக வாக்குகளைப் பெற்றோம். இளையோருடன் போட்டியிட்டு, நாங்கள் 36 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அது ஒருபோதும் நடக்காது. குடியரசுக் கட்சி வேட்பாளர், 36 அல்லது 40 வித்தியாசத்தில் தோற்றார். அதனால், தான் நான் டிக் டாக்பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். ஆகவே, நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், நாங்கள் டிக்டொக்கில் பிரச்சாரம் செய்தோம். எங்களுக்கு நல்ல பதில் கிடைத்தது. எங்களுக்கு கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றோம்." என்றார் அவர்
முன்னதாக, அரிசோனா, ஃபினிக்சில் நடைபெற்ற பழமைவாத ஆதரவாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க சந்தையிலிருந்து டிக்டாக் செயல்பாட்டு வெளியேற்றுவதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பது போல், டிரம்பின் கருத்துகள் இருந்தன.
தேசியப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி டிக்டாக் செயலியை திரும்பப் பெற வேண்டும் என்று அதன் முதன்மை நிறுவனம் ByteDance-யைக் கேட்டு கொண்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா ஒரு சட்டத்தை இயற்றியது.
மற்றொரு நிலவரத்தில், தனியார் துறையைச் சேர்ந்த தமது மிகப் பெரிய ஆதரவாளர், ஈலோன் மாஸ் அதிபர் பதவியை ஏற்கவில்லை என்று ட் திட்டவட்டமாக கூறினார்.
எனினும், தமது எதிர்கட்சியினர் அதனை பரிந்துரைக்க முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாரம் அரசாங்கத்தின் நிதியுதவியைத் தொடர மாஸ்க் மற்றும் டிராம்ப், இருகட்சி ஒப்பந்தத்தைத் தோற்கடித்த பின்னர், அமெரிக்க காங்கிரஸை குழப்பத்தில் ஆழ்த்தியது.
அதன் பின்னரே, அரிசோனா நகரில் பழமைவாத ஆதரவாளர்கள் முன்னிலையில், டிரம்ப் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா