பொது

நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

24/12/2024 02:12 PM

கோலாலம்பூர், 24 டிசம்பர் (பெர்னாமா) --  நாளை காலை, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய நான்கு மாநிலங்கள் மழையும், இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கெடா, பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பஹாங், திரெங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நாளை மாலையின் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா கணித்துள்ளது.

அதோடு, ஜோகூர், பஹாங், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக மெட்மலேசியா தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, நாளை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தங்களின் பயணத்தையும் நடவடிக்கைகளையும் திட்டமிட்டு மேற்கொள்ளும்படி மெட்மலேசியா பொது மக்களுக்கு நினைவுறுத்தி உள்ளது.

வானிலை குறித்த அண்மைய மற்றும் உண்மையான தகவல்களுக்கு மெட்மலேசியாவின் myCuaca செயலியை நாடலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)