மலாக்கா, 24 டிசம்பர் (பெர்னாமா) - தங்கள் மூவருக்கும் ஒன்றாக நடத்தப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டாம் பெற்றோருடனான இறுதி மகிழ்ச்சியான தருணமாக மாறியுள்ளது இவ்விபத்தில் பெற்றோரையும் இளைய சகோதரனையும் இழந்த மூன்று சகோதரர்களுக்கு.
நேற்றிரவு ப்ளாஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் கோலாலம்பூர் மற்றும் செர்டாங் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் 32 வயதுடைய கைருல் இக்வான் மசுபி, அதே வயதுடைய அவரின் துணைவியார் ஃபட்ஸ்லென்னா ரம்லி உட்பட 2 வயதுடைய அவர்களின் மகன் முகமட் உமாரும் 66 வயதுடைய ஃபட்ஸ்லென்னாவின் தந்தை ரம்லி அப் வஹாபும் உயிரிழந்தனர்.
அத்தம்பதியரின் மூத்த மகனான 7 வயதுடைய ஓவைஸ் அல்-கர்னி பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில் மலாக்கா மருத்துவமனையின் அவசர பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவர்களின், இரண்டாவது மகளான 4 வயதுடைய நூர் சோஃபியா ஹுமைரா, மஞ்சள் மண்டல பிரிவில் சிகிச்சைப் பெற்று தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மூன்று சகோதரர்களும் பிப்ரவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்திருந்தாலும் அண்மையில் அவர்களின் பிறந்தநாள் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட்டதாக கைருல் இக்வானின் தங்கை நூர் அக்கிலா மசூபி கூறினார்.
"இறுதியாக சனிக்கிழமை காலையில் பார்த்தேன். மலாக்காவிற்கு செல்வதற்கு முன் சிரம்பானில் நிறுத்தினர். (கேள்வி: நீங்கள் சிரம்பானில் வசிக்கிறீர்களா? மாற்றங்கள் உள்ளதா). சிறியவன் பார்க்கும் வரை கையசைத்தான். பார்க்காத வரையிலும் கையசைப்பார், " என்றார் அவர்.
இன்று காலை, மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் துறையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
பேருந்து ஒன்று லாரியின் டயரை மோதி கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த மேலும் மூன்று வாகனங்களை மோதி தடம் புரண்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)