பொது

நாட்டின் பொருளாதாரம் & அரசியல் நிலைத்தன்மையைப் பேணுவதில் பிரதமர் உறுதி

24/12/2024 04:12 PM

கோலாலம்பூர், 24 டிசம்பர் (பெர்னாமா) - 15வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், கடந்த ஈராண்டுகளில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை வழிநடத்திய டத்தோஸ்ரீ அன்வாரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவரின் நிர்வாகத்தில் விரைவான மற்றும் உறுதியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாத்தை மேம்படுத்துவதிலும், அரசியல் நிலைத்தன்மையைப் பேணுவதிலும் அன்வார் மிகவும் உறுதியுடன் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மலேசிய அரசியல் வரலாற்றில், 18-க்கும் மேற்பட்ட கட்சிகளை உள்ளடக்கி மிகப்பெரிய கூட்டணியுடன் அரசாங்கத்தை டத்தோஸ்ரீ அன்வார் வழிநடத்துவதாக டத்தோ ஶ்ரீ அமிருடின் தெரிவித்தார்.

''பிரதமரின் தீவிர முயற்சியுடன் போட்டியிட முடியாது. அந்தத் தீவிர முயற்சியுடன் அவர் காலையும் மாலையுமாக வீட்டிற்குச் சென்றும் பணிகளை செய்கிறார். உண்மையில், அவரின் முயற்சியால் அனைத்தும் மிக விரைவாக நடக்கிறது. இதுவரை அன்வாரை விடாமுயற்சியும் கடின உழைப்புமுள்ள அரசியல்வாதியாக அறிந்துள்ளேன். அதனை மறுப்பதற்கில்லை, '' என்றார் அவர்.

அதேவேளையில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை வழிநடத்தும் அன்வார் மீது எப்போதும் கவனம் செலுத்தப்படுவதோடு பல்வேறு தரப்பினரின் இலக்கிற்கும் ஆளாவதால் அவர் அதிக சுமையைத் தாங்கி வருவதாகவும் அமிருடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)