விளையாட்டு

போர்த்துகல் லீக்கில் பென்ஃபிகா முன்னிலை

24/12/2024 05:01 PM

லிஸ்பன், 24 டிசம்பர் (பெர்னாமா) - இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் பென்ஃபிகா 3-0 என்ற கோல்களில் எஸ்டோரில் பிரயா கிளப்பைத் தோற்கடித்துள்ளது.

அந்த வெற்றியின் வழி அது, 38 புள்ளிகளோடு பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் வேளையில்,எஸ்டோரில் பிரயா 13ஆம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சொந்த அரங்கில் விளையாடிய பென்ஃபிகா முதல் பாதி ஆட்டத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

அதன் பலனாக அந்த கிளப்பின் முதல் கோல் ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.

பென்ஃபிகாவின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எஸ்டோரில் பிரயா பல தடைகளைப் போட்ட போதிலும், அதன் அரண்களை உடைத்து பென்ஃபிகா தொடர்ந்து முன்னேறியதால் 74 மற்றும் 94வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து ஆட்டத்தை 3-0 என்ற கோல்களில் முடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)