பொது

ASB-யின் ஒரு பங்கிற்கான வருமான பகிர்ந்தளிப்பு ரிம. 5.75 என்று அறிவிப்பு

24/12/2024 05:38 PM

கோலாலம்பூர், 24 டிசம்பர் (பெர்னாமா) --  இவ்வாண்டின், டிசம்பர் 31-ஆம் தேதியோடு நிறைவடையும் நிதியாண்டில், Amanah Saham Bumiputera, எ.எஸ்.பி-யின் ஒரு பங்கிற்கான வருமான பகிர்ந்தளிப்பு 5 ரிங்கிட் 75 சென் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Permodalan Nasional நிறுவனம், பி.என்.பி-க்கு முற்றிலும் சொந்தமான பங்குகளை நிர்வகிக்கும் Amanah Saham Nasional நிறுவனம், எ.எஸ்.என்.பி இந்த அறிவிப்பைச் செய்துள்ளது.

பகிர்ந்தளிக்கப்படும் அத்தொகை வருமானத்தில் இருந்து ஒரு பங்கிற்கு 5 ரிங்கிட் 50 சென்னாகும்.

அதோடு, பங்கின் கூடுதல் தொகையாக ஒரு பங்கிற்கு 25 சென் வழங்கப்படுகிறது.

1,010 கோடி ரிங்கிட் மதிப்பிலான இந்த வருமான பகிர்ந்தளிப்பினால், எ.எஸ்.பி-யின் ஒரு கோடியே 11 லட்சம் பங்குதாரர்கள் பயனடைவார்கள் என்று பி.என்.ஃபி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)