உலகம்

அனைத்து மக்களும் உலகில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் - போப்

25/12/2024 05:46 PM

ரோம், 25 டிசம்பர் (பெர்னாமா) - ஏழை தச்சரின் மகனாக பிறந்த இயேசுவின் கதை, அனைத்து மக்களும் உலகில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை வழங்குவதாக ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவரான போப்பாண்டவர் தெரிவித்திருக்கிறார்.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, நேற்றிரவு வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் அவர் உரையாற்றினார்.

உலகில் அனைவராலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையைக் கிறிஸ்துமஸ் தினம் எடுத்துக்காட்டுவதாக போப்பாண்டவர் கூறினார்.

மேலும் உலகில் சில நாடுகளில் ஏற்பட்டிருக்கும் போர் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உலகில் அமைதியான சூழல் உருவாகி, அனைத்து மக்களும் மகிழ்ச்சிய வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் ரோம் நகருக்கு சுமார் மூன்று கோடியே 20 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)