டாக்கா, 25 டிசம்பர் (பெர்னாமா) - வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை ஒப்படைக்கும்படி அந்நாடு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக முறையீடு செய்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக வங்காளதேசத்தை ஆட்சி செய்த ஷேக் ஹசினாவின் அரசாங்கம், மாணவர்களின் போராட்டங்களால் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வங்காளதேசத்தின் அதிகாரப்பூர்வ கோரிக்கை கிடைத்திருப்பதை இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் இது தொடர்பான மேல் விவரங்களை அந்த அமைச்சு வெளியிடவில்லை.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போரட்டத்தினால் ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இந்த போரட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதனால் நிதிமன்றத்தில் அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
ஷேக் ஹசினா, இந்திய தலைநகர் புதுடெல்லியில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)