கோலாலம்பூர், 25 டிசம்பர் (பெர்னாமா) - மலேசிய விளையாட்டுத் துறை, ஆதரவாளர்களின் பற்றாக்குறை சிக்கலை எதிர்கொள்வதில்லை.
மாறாக ஆதரவு வழங்கும் நிறுவனங்களை கவர்வதில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் தரப்பினர் தோல்வி காண்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
''அவர்கள் (நிறுவனங்கள்) பணம் கொடுக்கும்போது, விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு வளர்ச்சிக்கு உண்மையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறார். அப்பணத்தை ஊதியம் கொடுக்கவோ, இதர விவகாரங்களுக்குப் பயன்படுத்துவதையோ அவர் விரும்பவில்லை, '' என்றார் அவர்.
மலேசிய விளையாட்டுத் துறை செய்தியாளர்களின் வலையொளியில் நேற்று ஒளியேறிய கலந்துரையாடலில் ஹன்னா யோ அவ்வாறு கூறினார்.
விளையாட்டுப் பயிற்சிக்கான கட்டணச் செலவுகளை உள்ளடக்கி, விளையாட்டுத் துறைக்காக 1,000 ரிங்கிட் மதிப்புள்ள வரி விலக்கு வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் விளையாட்டுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)