விளையாட்டு

இபிஎல்: லிவர்பூல் தொடர்ந்து முன்னிலை

27/12/2024 05:28 PM

லண்டன், 27 டிசம்பர் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண பட்டியலில் லிவர்பூல் தொடர்ந்து முன்னிலை வகிக்றது.

இன்று அதிகாலை லெய்செஸ்டர் சிட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தன் மூலம் லீக் அட்டவணையில் அது தனது முதலிடத்தை வலுப்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் 17 ஆட்டங்களுக்குப் பிறகு 42 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 

சொந்த அரங்கில் நடந்த இந்த அதிரடி ஆட்டத்தில்,லிவர்பூலுக்கு எதிரான முதல் கோலை ஆறாவது நிமிடத்தில் அடித்தது லெய்செஸ்டர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

பின்னர், முதல் பாதியின் இறுதி நிமிடங்களில், லிவர்பூல் அதன் அணிக்கான கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது. 

இரண்டாம் பாதி முழுவதுமாக ஆக்கிரமிக்கத் தொடங்கிய லிவர்பூல் 49 மற்றும் 82-வது நிமிடங்களில் எஞ்சிய கோலைப் போட்டது. 

அதில் ஒரு கோல், அதன் நட்சத்திரம் முஹமட் சாலாவின் வழி அடிக்கப்பட்டது. 

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)