பொது

SKSSR: மனிதவள அமைச்சுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியில் பெர்கேசோ வெற்றி

30/12/2024 04:43 PM

கோலாலம்பூர், 30 டிசம்பர் (பெர்னாமா) - இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம் எஸ்.கெ.எஸ்.எஸ்.ஆரின் கீழ் சந்தாதாரர்களின் பங்களிப்பு 100 விழுக்காடு எட்டுவதற்கு மனிதவள அமைச்சுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியில் சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோ வெற்றிப் பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் எஸ்.கெ.எஸ்.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் பங்களித்துள்ளதாக பெர்கேசோவின் இல்லத்தரசிகளுக்கான சமூக பாதுகாப்பு செயற்குழுத் தலைவர் கஸ்தூரி பட்டு தெரிவித்திருக்கிறார்.

''ஐந்து லட்சத்திற்கும் அதிகமான இல்லத்தரசிகள் இவ்வாண்டு எஸ்.கெ.எஸ்.எஸ்.ஆர் திட்டத்திற்குப் பதிவு செய்திருந்தாலும், இது மொத்த இல்லத்தரசிகளின் எண்ணிக்கையில் 16.5 விழுக்காடாகும். இன்னும் 26 லட்சம் இல்லத்தரசிகள் இன்னும் பதிவு செய்யவில்லை,'' என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர் விஸ்மா பெர்கேசோவில், 2024ஆம் ஆண்டுக்கான பெர்கேசோவின் இலக்கு தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கஸ்தூரி பட்டு இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் வரை 39 லட்சம் ரிங்கிட் மதிப்பை உட்படுத்தி 2019 விண்ணப்பங்களுக்கு பெர்கேசோ ஒப்புதல் அளித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)