போனா, 31 டிசம்பர் (பெர்னாமா) - எத்தியோப்பியாவில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 71 பேர் உயிரிழந்தனர்.
இவ்விபத்து போனா மாவட்டத்தில் நிகழ்ந்ததாக வட்டார தொடர்பு பிரிவு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவத்தில், 68 ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்தாக சிடாமா வட்டார அரசாங்கப் பேச்சாளர் வோசென்யேலே சைமன் தெரிவித்தார்.
வளைவுகள் அதிகம் உள்ள சாலையில் சம்பந்தப்பட்ட லாரி பயணித்துக் கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பாலத்தில் தவறி விழுந்ததாக வோசென்யேலே கூறினார்.
டிரக்கில் அதிகமான பயணிகள் இருந்ததால் கூடுதல் சுமை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எத்தியோப்பியாவில் மோசமாக வாகனத்தைச் செலுத்துவதாலும் வாகனங்களை முறையாக பராமரிக்காததாலும் ஆபத்தான விபத்துக்கள் நிகழ்வது வழக்கமாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)