பேங்காக் , 31 டிசம்பர் (பெர்னாமா) - ஒரே நேரத்தில் ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் போட்டியிட தேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையரான யாப் ரோய் கிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரு பிரிவுகளில் விளையாடுவது போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும் ஆட்டத்தின் வேகத்தை இழக்காமல் இருப்பதற்கும் உறுதி செய்யும் என்று அவர் கூறுகிறார்.
"நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். அடுத்த வாரம் எங்களுக்குப் போட்டி உள்ளது. நாங்கள் இப்போது தொடங்கியே சொந்த அரங்கில் விளையாடுவதற்கான உற்சாகத்தை உணர்கிறோம். எங்களின் தயார் நிலை நன்றாக இருக்கிறது. மலேசிய பொது பூப்பந்து போட்டிக்கு நானும் நன்றாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதனால் சிறந்த பலன் கிடைக்கும் என நம்புகிறேன், " என்றார் அவர்.
இதனிடையே, யாப் ரோய் கிங்கின் இணையரான வான் முகமட் ஆரிப் மலேசிய பொது பூப்பந்து போட்டிக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
"இப்போட்டி மிகவும் பெரியது. சீனப் பொது பூப்பந்து போட்டியில் விளையாடினோம். ஆக, நாங்கள் விளையாட்டை ரசித்து எங்களிடம் உள்ளதை வைத்து விளையாட விரும்புகிறோம், " என்றார் அவர்.
உலகின் 23ஆம் நிலையில் இருக்கும் இந்த ஜோடி, ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)