கோலாலம்பூர், 01 ஜனவரி (பெர்னாமா) - கடந்தாண்டு அக்டோபர் முதலாம் தேதி அமல்படுத்தப்பட்ட 2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாடு சட்டம், சட்டம் 852க்கு இணங்க,
இன்று தொடங்கி, கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு சலவைக் கடைகள் மற்றும் உணவகங்களில் புகைபிடிப்பதற்கான தடை அறிவிப்பு பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.
பெரும்பாலான கடைகளின் நுழைவாயில் உணவிடங்கள் மற்றும் முகப்பிடங்களில் புகைபிடிப்பதற்கான எதிரான அறிவிப்பு பதாகைகள் ஒட்டப்பட்டிருப்பது, இன்று பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், மற்றவர்களின் நலன் குறித்து அக்கறையின்றி விதிக்கப்பட்ட தடையைப் புறக்கணித்து சிலர் புகைப் பிடித்து கொண்டிருப்பதும் அதில் கண்டறியப்பட்டது.
இதனிடையே, சிகரெட் புகையின் தொந்தரவுகளின்றி தற்போது சலவை சேவையை எவ்வித தடைகளுமின்றி செய்து வருவதாக அதன் பயனர் ஒருவர் தெரிவித்தார்.
கடைகளின் நலனைப் பராமரிப்பதை தவிர்த்து குழந்தைகளை அவ்விடத்திற்கு அழைத்து செல்லும் சூழலை உருவாக்கும் நோக்கில் இச்சட்டம் அமைந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)