கோத்தா பாரு, 01 ஜனவரி (பெர்னாமா) -- மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள நான்கு மாநிலங்களில் வெளிநாட்டு வாகனங்களைச் சோதனையிடுவதற்குச் சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே, Ops Tunggak சிறப்பு சோதனை நடவடிக்கையை இன்று தொடங்கியது.
பெர்லிஸ், கெடா, பேராக் மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் அச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்று ஜே.பி.ஜே அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் முஹமட் கிஃப்ளி மா ஹாசான் தெரிவித்தார்.
2025 புத்தாண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கை நிலுவையில் உள்ள சம்மன் பதிவு உட்பட சட்டத்தை மீறும் வெளிநாட்டு ஓட்டுநர்களைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக முஹமட் கிஃப்ளி விவரித்தார்.
"நாங்கள் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வோம். வாகனத்திற்கு நிலுவையில் உள்ள சம்மன்கள் இருப்பதைக் கண்டறிந்தால் பயணத்தைத் தொடரும் முன், நிலுவையில் உள்ள சம்மன்களை செலுத்துமாறு ஓட்டுநரிடம் கேட்போம்", என்று அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு, புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கைக்கு பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வெளிநாட்டு வாகனங்கள், குறிப்பாக தாய்லாந்தில் இருந்து வரும் வாகனங்கள், அதே குற்றங்களை மீண்டும் செய்வது கண்டறியப்பட்டுள்ளதாக முஹமட் கிஃப்ளி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)