டாக்கா, 01 ஜனவரி (பெர்னாமா) - இந்தியாவிற்கு தப்பி ஓடிய வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாக்கு மரண தண்டனை விதிக்க கோரி தலைநகரில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுப்பட்டனர்.
ஹசீனாவின் 16 ஆண்டுகால ஆட்சியை கவிழ்ப்பதற்கு அதிகமான இயக்கத்தை வழிநடத்திய 'Students Against Discrimination' எனும் மாணவர் குழு, டாக்காவில் இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
டாக்காவின் ஷஹீத் மினார் பல்கலைக்கழக பகுதியில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
ஷேக் ஹசீனா ஆட்சியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குற்றங்களுக்காக சட்ட நடவடிக்கைகள் எடுக்க, நாடு முழுவதும் இருந்து குறைந்தது ஐந்தாயிரம் பேர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் வங்காளதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமட் யூனுஸ் தலைமைத்துவம், 'ஜூலை பிரகடனத்தை' அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஹசீனா ஆட்சியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து துல்லியமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி பல இடங்களில் மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)