பொது

பல்வேறு குற்றங்களுக்காக 101 மோட்டார் சைக்கிள்கள் & 117 வாகனங்கள் பறிமுதல்

01/01/2025 07:17 PM

ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, 01 ஜனவரி (பெர்னாமா) --   கோலாலம்பூரில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 101 மோட்டார் சைக்கிள்களும் 117 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்றிரவு மணி 8-க்குத் தொடங்கிய இந்நடவடிக்கை, கோலாலம்பூரில் மோட்டார் சைக்கிளோட்டிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச சாலை போக்குவரத்து துறையின் இயக்குனர் ஹமிடி அடாம் கூறினார்.

இதில் ​​5,094 வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில், பல்வேறு குற்றங்களுக்காக 731 வாகனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டன.

அதோடு, பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட 75 வெளிநாட்டு ஓட்டுநர்களைச் சோதனையிட்டதில், 30 பேர் குடிநுழைவுத்துறையால்கைது செய்யப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)