விளையாட்டு

புதிய ஆண்டில் பூமாவின் புதிய ஜெர்சி அறிமுகம்

01/01/2025 07:19 PM

கோலாலம்பூர், 01 ஜனவரி (பெர்னாமா) - புதிய ஆண்டில், புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது பூமா.

தேசிய காற்பந்து அணியின் அதிகாரபூர்வ சீருடை மற்றும் ஜெர்சிக்கான ஆதரவாளராகவும் அனைத்துலக ரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு சின்னமாகவும்
பூமா தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியிலிருந்து வியூக ஒத்துழைப்பை வழங்கும் அந்த விளையாட்டு உடை, மலேசிய காற்பந்து அணிக்கான முக்கிய சாதனையைக் குறிப்பதாக மலேசிய காற்பந்து சங்கம், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதன், அதிகாரப்பூர்வ திறப்பு விழாவின் போது, மலேசிய காற்பந்து சங்கம் மற்றும் பூமா இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டுதொடங்கி கடந்தாண்டு டிசம்பர் வரை, 18 ஆண்டுகளாக ஹரிமாவ் மலாயா அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி ஆதரவாளராக இருந்த நைக்கிற்கு மலேசிய காற்பந்து சங்கம் தமது நன்றியைத் தெரிவித்து கொண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)