பட்டர்வெர்த், 01 ஜனவரி (பெர்னாமா) -- 2024 ஆம் ஆண்டு முழுவதும், பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறையால் ஏறத்தாழ ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அம்மாநிலத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதில், 24 ஆயிரத்து 588 மோட்டார் சைக்கிள்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், 778 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு மாநிலத்தின் ஜே.பி.ஜே இயக்குநர் சுல்கிப்ளி இஸ்மாயில் தெரிவித்தார்.
"இன்னும் ஓட்டுநர் உரிமத்தைப் பெறாதது மிகப் பெரிய குற்றமாகும். மோட்டார் சைக்கிள்களைப் பரிசோதனை செய்ததில் ஓட்டுநர் உரிமம் இல்லாதது தொடர்பான குற்றங்களே அதிகம் இருந்தன", என்று அவர் கூறினார்.
பினாங்கு, பகான் அஜாம் டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கைக்கு பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)