புத்ராஜெயா, 02 ஜனவரி (பெர்னாமா) -- SPM தேர்வு எழுதுவதற்காக, 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்த 2 ஆயிரத்து 90 பேர், இன்று புத்ராஜெயாவில் உள்ள 11 தேர்வு மையங்களில் அத்தேர்வை எழுதத் தொடங்கினர்.
அதில், எழுவர் சிறப்புக் கல்வி தேர்வு எழுதுபவர்கள் என்று புத்ராஜெயாவின் கூட்டரசு பிரதேச கல்வித்துறை இயக்குநர் எசாய்டின் உசேன் தெரிவித்தார்.
''தேர்வெழுதும் மூவர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் புத்ராஜெயாவில் தேர்வு எழுதுபவர்கள். எனவே, தேர்வு மையத்திற்குச் செல்ல முடியாத மாணவர்களின் இலக்குத் தன்மைக்காக எங்களின் அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று அங்கு மாணவர்கள் தேர்வு எழுதுவதைக் கண்காணிப்பர்'', என்று அவர் கூறினார்.
புத்ராஜெயா Presint 8-இல் உள்ள இடைநிலைப்பள்ளியில் எஸ்பிஎம் தேர்வின் முதல் நாள் நிலவரங்களை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
பிப்ரவரி 6 ஆம் தேதிவரை நடைபெறும் எஸ்பிஎம் தேர்வுக்காக, புத்ராஜெயாவில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் 108 அதிகாரிகள் பணியை மேற்கொள்வார்கள் என்று எசாய்டின் உசேன் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)