பொது

இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு புத்ராஜெயா சிறப்பு பதிவு எண்ணுக்கான ஏலம்

02/01/2025 04:48 PM

புத்ராஜெயா, 02 ஜனவரி (பெர்னாமா) --   FG வாகன பட்டையை உட்படுத்திய புத்ராஜெயா சிறப்பு பதிவு எண்ணுக்கான ஏலத்தை இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு சாலைப் போக்குவரத்துத் துறை திறப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

புதிய அலுவலகம் திறகப்பட்டதன் அடையாளமாக இந்த ஏலம் திறக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

''இதற்கு முன்னர் FFஆகவும், கடந்தாண்டு FFFஆகவும் இருந்த வேளையில், இவ்வாண்டு FG-ஐ தொடங்கியுள்ளோம். எனவே, இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு இது நடைபெறும்'', என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில், அக்கூட்டரசுப் பிரதேசத்திற்கான புதிய ஜேபிஜே அலுவலகத்தைத் திறந்த வைத்தப் பின்னர் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

JPJ வருமானத்தை அதிகரிப்பது மட்டுமின்றி சிறப்பு எண்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் இந்நடவடிக்கை ஏற்படுத்தித் தருவதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை JPJ EBID மூலம் ஏலம் திறக்கப்பட்டிருக்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)