புத்ராஜெயா, 02 ஜனவரி (பெர்னாமா) -- அடைவுநிலைகள், இடைவெளி மற்றும் வாய்ப்புகளை அடையாளம் காண 12-வது மலேசிய திட்டம் RMK12 கீழ் உள்ள அனைத்து திட்டங்களும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
புறநகர் மக்களுக்கான சேவையில் உள்ள பலவீனங்களைச் சரிசெய்ய அந்த மதிப்பாய்வு வழிவகுக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.
துணிச்சலான மற்றும் தீவிரமான திட்டமிடல் தேவைப்படும் 13-வது மலேசியத் திட்டம் RMK13-க்கான தயார் நிலை பணிகளுக்கு இந்நடவடிக்கை அவசியம் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.
''நேர்மையே சிறந்த கொள்கை. எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் பலவீனத்தை ஒப்புக்கொள்ளவும் எந்தவொரு தவறை சரி செய்யவும் துணிய வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் நாம் அமைக்கும் செயல்திறன் குறியீடு மக்களின் திருப்தியில் அடிப்படையில் இருக்க வேண்டும். காரணம் நாம் அனைவரும் அவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் சேவை செய்கிறோம்'', என்று அவர் கூறினார்.
இன்று, வியாழக்கிழமை புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் புத்தாண்டு உரையில் அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)