உலகம்

ஜெஜு ஏர் விமான தரவுப் பதிவுகள் அமெரிக்காவிற்கு ஆய்வுக்காக அனுப்பப்படும்

02/01/2025 06:20 PM

தென் கொரியா, 02 ஜனவரி (பெர்னாமா) -- கடந்தாண்டு டிசம்பர் 29-ஆம் தேதி, விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் தரவு பதிவுகள் ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் என்று தென் கொரியா அரசாங்கம் தெரிவித்தது.

விமானத்தின் தரவு பதிவுகளை அனுப்புவதற்கான சரியான அட்டவணை அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முவான் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்த ஜெஜு ஏர் விமானப் பாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பதிவு கருவி வெளிப்புறத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், விமானி அறையின் குரல் பதிவு பெட்டியிலிருந்து அமலாக்கத் தரப்பினர் தரவுகளை சேகரித்துள்ளனர்.

இதனிடையே, முவான் அனைத்துலக விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு கூடுதல் ஆய்வாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போயிங்கியிலிருந்து ஆறு மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், NTSB-இல் இருந்து மூன்று என அமெரிக்க குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]