பொது

கேஎல்ஐஏ விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் ஐயப்ப பக்தர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்: யுவராஜா குருசாமி

02/01/2025 07:41 PM

புத்ராஜெயா, 02 ஜனவரி (பெர்னாமா) - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகும் என்று மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி தெரிவித்தார்.

48 நாட்கள் விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்ய சபரிமலைக்கு செல்கின்றனர்.

அப்படி செல்லும் பக்தர்கள் விமான நிலையங்களில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் போக்குவரத்து துறை அமைச்சு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையங்களில் உரிய சலுகைகள் வழங்கப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும்.

அதே வேளையில் பக்தர்கள் தனித் தனியாக வராமல் ஒற்றுமையாக வந்தால் அவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படும் என அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆகவே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் உரிய நேரத்தில் விமான நிலையங்களுக்கு சென்று விட வேண்டும்.

அதே வேளையில் விமான நிலைய, நிறுவன அதிகாரிகளின் வழிகாட்டிகளை முறையாகப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் யுவராஜா கேட்டு கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)