பொது

கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

02/01/2025 07:51 PM

கோலாலம்பூர், 02 ஜனவரி (பெர்னாமா) --   கிளானா ஜெயா வழித்தடத்தில் உள்ள கேஎல்சிசி LRT இரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

அதனை, Rapid KL இரயில் நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி அறிவித்திருந்தது.

இரயில் நிலையத்தின் உள்பகுதியில் அமைந்துள்ள மின்சார உபகரண அறையில் புகை வெளிவந்துள்ளதைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனிடையே, பயணிகள் தங்களின் பயணத்தை இலகுவாக்க கேஎல்சிசி பெர்சியாரான் நிலையம், அம்பாங் பூங்கா நிலையத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், அம்பாங் பார்க், கேஎல்சிசி, டாங் வாங்கி உள்ளிட்ட எல்ஆர்டி நிலையங்களில் இலவச பேருந்து சேவையும் வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)