பொது

நாட்டின் பொருளாதாரம் ஊக்குவிக்கும் வகையிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

03/01/2025 03:39 PM

புத்ராஜெயா, 03  ஜனவரி (பெர்னாமா) -- அனைத்து நிலையிலுமான தலைமைத்துவக் குழுக்கள் மற்றும் பொது சேவை துறை ஊழியர்களுடனான முயற்சியினால், இதுவரை நாட்டின் பொருளாதாரம் ஊக்குவிக்கும் வகையிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த வெற்றி, உயர்மட்ட நிர்வாகத் தரப்பு தொடங்கி ஊழியர்கள் வரையில் அனைத்து தரப்பின் விடாமுயற்சியையும் தியாகத்தையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

''இன்று, இவ்வாண்டு ஜனவரியில் நான் இவ்வாண்டுக்கான மறுசீரமைப்பைத் தொடங்க விரும்புகிறேன். கடந்தாண்டின் பெருமைக்குரிய அடைவு நிலையைத் தற்காத்துக் கொள்ள பொதுவாக மக்களும் பொது சேவை ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்,'' என்றார் அவர்.

2024ஆம் ஆண்டின் சிறப்பான அடைவுநிலையின் அடிப்படையில், 2025ஆம் ஆண்டில் மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து நேர்மறையாக வளர்ச்சி காணும் என்று பொருளாதார உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, KDNK-வும் 6.0 விழுக்காடு வரை உயர்வு காணும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)