பொது

பேரணியில் கலந்து கொள்ளும் அம்னோ உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

05/01/2025 06:46 PM

ஜாஜ்டவுன், 05 ஜனவரி (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில், நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான ஆதரவு பேரணியில், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளூம் அம்னோ உறுப்பினர்கள் மீது அக்கட்சி ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்.

தேசிய போலீஸ் படை தலைவரின் கட்டளைக்கு இணங்குவதோடு, அதனை பின்பற்றுவதற்காகவும் பேரணியில் பங்கேற்க போவதில்லை என்று கட்சி முடிவு செய்திருப்பதாக அதன் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

''ஒரு தனிநபராக இருந்தால், அதற்கான விளைவு எதிர்கொள்வதை அவர்களிடமே விட்டுவிடுகிறோம். அந்த சூழ்நிலையில், எந்தவொரு பிரிவு மற்றும் கிளைகளில் இருந்து யாரும் ஈடுபடமாட்டார்கள் என்று நம்புகிறோம்,'' என்றார் அவர்.
SUPER : டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி / துணைப் பிரதமர்

அரச மன்னிப்பு ஆணை தொடர்பாக, நஜிப் செய்த மேல்முறையீட்டு மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நாளை செவிமடுக்கவுள்ளது.

முன்னதாக, இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் மாமன்னரின் உத்தரவை மதிக்கும்படியும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)