சிலாங்கூர், 04 ஜனவரி (பெர்னாமா) - அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் இராணுவ சடங்குகளுக்கான உடையைப் போன்று அணிந்திருந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அவ்வமைப்பிற்கு எதிராக போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
சில நபர்கள் அவ்வாறு உடையணிந்து விழா ஒன்றில் கலந்துகொண்ட காணொளி 'டிக் டாக்' சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதைத் தமது தரப்பு கண்டறிந்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசைன் உமார் கான் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 140, 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டம் செக்ஷன் 50(3) உட்பட மலேசிய தொடர்பு பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233 ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக டத்தோ ஹூசைன் கூறினார்.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அச்செயல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அவர்களின் அச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் Hussein தெரிவித்தார்.
எனவே, இது குறித்த விவரம் தெரிந்தவர்கள் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)