பொது

ஒற்றுமையை வலுப்படுத்தும் பள்ளி பேருந்து உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் தினம்

04/01/2025 05:03 PM

கோலாலம்பூர், 04 ஜனவரி (பெர்னாமா) -- பள்ளி பேருந்து உரிமையாளர் மற்றும் ஒட்டுநர்கள் இடையிலான ஒற்றுமை எனும் கருப்பொருளில், நாடு முழுவதும் பள்ளி பேருந்து உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது.

இனம், மதம் வேறுபாடின்றி இந்த ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்று மலேசிய தேசியப் பள்ளிப் பேருந்து ஒருங்கிணைந்த உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சபா மற்றும் சரவாக் மாநிலம் உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்களில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரை இரண்டு நாள்களாக இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இத்தினத்தை, ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட எண்ணம் கொண்டுள்ளதாக மலேசிய தேசியப் பள்ளிப் பேருந்து ஒருங்கிணைந்த உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் எம். முருகமலை தெரிவித்தார்.

இதனிடையே, தங்களது தரப்பிற்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நன்மைகளையும் அவ்வப்போது மக்களுக்கு தெரியப்படுத்தி வருவதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

''தேசியப் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் சங்கத்தில் இணைந்த சங்கங்களுக்கு காப்புறுதி அளித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில், அனைத்து பள்ளி பேருந்துகளுக்கும் பிள்ளைகளுக்கும் காப்புறுதி எடுக்க வேண்டும். இது குறித்துதான், அரசாங்கத்தில் உள்ள திட்டங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம்,'' என்றார் அவர்.

உறப்பினர்களின் ஒத்துழைப்புடன் சங்கம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)