விளையாட்டு

உடனடி மாற்றங்களை மேற்கொள்ள முற்படாத கென்னத்

04/01/2025 05:22 PM

புக்கிட் கியாரா, 04 ஜனவரி (பெர்னாமா) - இன்று மலேசிய பூப்பந்து கழகம், ஏ.பி.எம்மில் தேசிய ஒற்றையர் பூப்பந்து தலைமை பயிற்றுநராக தமது பணியைத் தொடங்கிய கென்னத் யுனொசன் உடனடியாக எந்தவோரு கடுமையான மாற்றத்தையும் மேற்கொள்ள முற்படவில்லை.

தமது சொந்த யோசனைகளை முன்வைப்பதற்கு முன்னதாக அனைத்து தரப்பினருடனும் குறிப்பாக விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்றுநர்களைச் சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக டென்மார்க் பூப்பந்து சகாப்தமான யுனொசன் தெரிவித்தார்.

''எனவே அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வழக்கம்போல நடக்கும். ஏனெனில், எனது சில யோசனைகளுடன் நான் உடன்படுவதற்கு முன்பதாக விளையாட்டாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களின் யோசனைகளைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனெனில், எல்லாவற்றையும் புரிந்துகொள்வதுதான் நாம் முன்னேறுவதற்கான திறவுகோல் மற்றும் சிறந்த உந்துதல் என்று நான் நினைக்கிறேன், '' என்றார் அவர்.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் மலேசிய பொதுப் பூப்பந்து போட்டியின்போது, பயிற்றுநர் கே.யோகேந்திரனுடன் இணைவது அனைத்துலக அரங்கில் தேசிய விளையாட்டாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான முதல் படி என்றும் யுனொசன் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)