விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி; கவனம் ஈர்த்தார் ரோக்கா

08/01/2025 07:45 PM

மெல்பர்ன், 08 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்கி உள்ளன. 

அதில், இன்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்றில், ஹங்கேரியின் மார்டன் ஃபுசோவிக்ஸ்சை நேரடி செட்களில் வீழ்த்தி, கவனத்தை ஈர்த்துள்ளார் போர்த்துகலின் இளம் ஆட்டக்காரர் ஹென்ரிக் ரோக்கா. 

மெல்பர்ன் டென்னிஸ் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 20 வயதான ஹென்ரிக் ரோக்கா முதல் செட்டை மிக எளிதில் 6-2 என்ற நிலையில் வென்றார். 

இரண்டாம் செட்டி, ஃபுசோவிக்ஸ்சை கடும் போட்டியை வழங்கிய போதிலும், ரோக்கா அதனைத் தகர்த்து 7-6 என்ற நிலையில் வெற்றிக் கண்டார். 

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில், அனுபவத்தோடு இரு முறை நான்காம்  சுற்றுவரை முன்னேறிய ஃபுசோவிக்ஸ்சை புதிய இளம் ஆட்டக்காரரக உருவாகியுள்ள ரோக்கா தோற்கடித்துள்ளார். 

அடுத்த சுற்றில் அவர் இத்தாலியின் மெட்டியோ கியாந்தேவைச் சந்திக்க உள்ளார்.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)