பொது

ஜோகூர் பாருவில் துப்பாக்கிச் சூடு; ஆடவர் பலி

08/01/2025 07:47 PM

ஜோகூர் பாரு, 08 ஜனவரி (பெர்னாமா) -- ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உள்ள உணவகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பிற்பகல் 12 மணிக்குத் தகவல் கிடைத்ததாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பலியானவர் 40 வயது உள்ளூர் ஆடவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு உதவும் நோக்கில் உணவகம் மற்றும் அருகிலுள்ள வளாகத்தின் மறைக்காணி காணொளிகள் ஆராயப்படும்.

கொல்லப்பட்ட ஆடவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)