கோத்தா கினபாலு, 01 ஜனவரி (பெர்னாமா) - சபா மாநில முன்னாள் முதலமைச்சர் டான் ஸ்ரீ மூசா அமான் அம்மாநிலத்தின் 11வது ஆளுநராக இன்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
இவரின் பதவியேற்பு சடங்கு கோத்தா கினபாலுவில் உள்ள செரி கினபாலு இஸ்தானாவில் நடைபெற்றது.
தமது மனைவி தோ புவான் ஃபரிடா துசினுடன் வந்திருந்த டான் ஸ்ரீ மூசா, காலை மணி 10.22 அளவில் பதிவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
சபா மற்றும் சரவாக்கின் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் செப்லி, சபா ஆளுநரின் பதவிப் பிரமாணத்தில் கையெழுத்திட்டார்.
இச்சடங்கு காலை மணி 10.43க்கு நிறைவு பெற்றது.
இச்சடங்கில் மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி நூர், துணை முதலமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெஃப்ரி கித்திங்கன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 17ஆம் தேதி, மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் இருந்து மூசா தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)