கோலாலம்பூர், 12 ஜனவரி (பெர்னாமா) - 1986ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி 39 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கியாட்மாரா நாட்டில் திறமையான பணியாளர்கள் மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
இன்றையத் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பம் மற்றும் தொழில் திறன் பயிற்சித் துறையை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கியாட்மாரா, மலேசியா முழுவதும் 232 கிளைகளை கொண்டுள்ளதாக துணைப் பிரதமரும் அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தகுதிவாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவது கியாட்மாராவின் வெற்றியாகும்.
ஒவ்வொரு மாணவரும் போட்டித்தன்மையுடன் மட்டுமல்லாமல் அந்தந்த துறைகளில் வெற்றியை உருவாக்கத் தயாராக இருப்பதையும் உறுதி செய்வதில் அந்த வெற்றி பிரதிபலிப்பதாக டாக்டர் சாஹிட் ஹமிடி தமது முகநூல் பதிவின் வழி தெரிவித்தார்.
ஏறக்குறைய 40 ஆண்டுகள் வெற்றி நடைபோடும் கியாட்மாராவிற்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி டிவெட்டின் தலைவருமான அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)