குளுவாங், 12 ஜனவரி (பெர்னாமா) - ஜோகூரில் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கி இருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலையைக் காட்டிலும் மாலையில் தொடர்ந்து அதிகரித்துள்ள வேளையில் பேராக்கில் மிகப்பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
ஜோகூரில் இன்று காலை இருந்த 3,449 பேரைக் காட்டிலும் மாலை 3,779 பேராக உயர்ந்துள்ளது.
1,080 குடும்பங்களைச் சேர்ந்த அந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 36 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு தலைவர் டான் ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்தார்.
அதேவேளையில், கூலாயில் 763, குளுவாங்கில் 763 மற்றும் ஜோகூர் பாருவில் 719 பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பொந்தியானில் 556 பாதிக்கப்பட்டவர்கள் எட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று, கனமழை இல்லை என்றாலும் வீடுகளில் வெள்ளநீர் தேங்கி இருப்பது குளுவாங் வெள்ளப் பகுதியில் பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் பிபிஎஸ்-சில் இன்னும் தங்கி உள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)