லண்டன், 13 ஜனவரி (பெர்னாமா) -- FA கிண்ண காற்பந்து போட்டியின் கிண்ணத்தைக் கைப்பற்றும் ஆர்செனலின் இலக்கு சொந்த அரங்கில் ஈடேறாமல் போனது.
இன்று அதிகாலை நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் யுனைடெட் ஆர்செனலை 5-3 என்று பெனால்டி வாய்ப்பைத் தோற்கடித்தது.
இரு அணிகளுமே பலம் பொருந்தியதால் முதல் பாதி ஆட்டம் அந்த கிளப்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.
அதனால் முதல்பாதி ஆட்டம் கோல்களின்றி முடிந்தது.
பின்னர், இரண்டாம் பாதியின் 53வது நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸ் மென்செஸ்டர் யுனைடெட்டின் முதல் கோலை அடித்தார்.
அதன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த போராடிய ஆர்செனல், அடுத்த சில நிமிடங்களில் அதற்கான கோலைக் கேப்ரியல் வழிப்போட்டது.
ஆட்டம் 1-1 என்று சமநிலையானதை அடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில், மென்செஸ்டர் யுனைடெட் 5-3 என்ற கோல்களில் ஆர்செனலை வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)