உலகம்

இலங்கையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

13/01/2025 08:39 PM

கொழும்பு, 13 ஜனவரி (பெர்னாமா) --  இலங்கையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கொழும்வின் வடமேற்கு பகுதியான கம்பஹா மாவட்டங்களிலும் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம்பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)